» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

படகில் இருந்து கடலுக்குள் தவறிவிழுந்த மீனவர் உயிரிழப்பு - தூத்துக்குடியில் பரிதாபம்!

வியாழன் 24, நவம்பர் 2022 11:31:43 AM (IST)

தூத்துக்குடியில் படகில் இருந்து கடலுக்குள் தவறிவிழுந்து காயம் அடைந்த மீனவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். 

தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர்  அந்தோணிச்சாமி மகன்  தோமஸ் (56), மீனவரான இவர் நேற்று காலை சக மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவிட்டு திரேஸ்புரம் மீன்பிடி இறங்குதளத்தில் மீன்களை இறக்கி கொண்டிருக்கும்போது படகிலிருந்து நிலை தடுமாறி கடலுக்குள் தவறி விழுந்தார். 

சக மீனவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அரசு   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கிசிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். இது சம்பந்தமாக தருவைக்குளம் கடல் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital


Thoothukudi Business Directory