» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மாரி செல்வராஜ் பட ஷூட்டிங்: உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்!

செவ்வாய் 22, நவம்பர் 2022 11:44:11 AM (IST)தூத்துக்குடியில் மாரி செல்வராஜ் இயக்கி வரும் வாழை படத்தின் படப்பிடிப்பை உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

"பரியேறும் பெருமாள்" என்ற திரைப்படம் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் மாரி செல்வராஜ். தொடர்ந்து, தனுஷை வைத்து எடுத்த 'கர்ணன்' திரைப்படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இவ்விரு வெற்றிப்படங்களை தொடர்ந்து, தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் 'மாமன்னன்' படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இந்நிலையில்,மாரி செல்வராஜ் தயாரித்து இயக்க உள்ள 'வாழை' திரைப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் தொடங்கியது. 

இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படப்புகழ் பிரியங்கா மற்றும் சிறுவர்கள் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory