» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாமிரபரணி ஆற்றின் தண்ணீரில் தார்சாலை கழிவுகளை கொட்டிய அவலம்!

சனி 19, நவம்பர் 2022 10:08:43 AM (IST)தூத்துக்குடி அருகே தாமிரபரணி ஆற்றில் தார் கழிவுகளை கொட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி- திருநெல்வேலி இந்திய தேசிய சாலையான வல்லநாடு தாமிரபரணி ஆற்று பாலத்தில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இந்நிலையில் பராமரிப்பு நிறுவனம் 17ம் தேதி இரவு, தார் கழிவுகளை இயந்திரம் மூலம் அகற்றி தாமிரபரணி ஆற்றில் கொட்டி உள்ளனர். இந்த செயலில் ஈடுப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு தலைவர், மு.சுகன் கிறிஸ்டோபர் சமூக வலைதளங்கள் மூலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் சார் ஆட்சியருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பினார். 

மேலும்  தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இதனிடையே சம்பவ இடத்திற்கு திருவைகுண்டம் வட்டாச்சியர் வந்து ஆய்வு செய்து, அறிக்கை அனுப்புவதாக உறுதியளித்தார்.  இதுபோன்று தார் கழிவுகளை கொட்டிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, தூத்துக்குடி மாவட்ட  மக்களின் குடிநீர் மற்றும் விவசாய ஆதரமாக விளங்கும் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

MauroofNov 23, 2022 - 07:00:37 PM | Posted IP 162.1*****

எவ்வளவு கொடுமையான செயல்?. கடும் நடவடிக்கை அவசியம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory