» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை - ரயில் தாமதம்

வெள்ளி 18, நவம்பர் 2022 8:56:58 PM (IST)


தூத்துக்குடி ரயிலில் வெடிகுண்டு வெடிக்கும் என்று தொலைபேசியில் வந்த மிரட்டலால் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். 

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினசரி இரவு 8.15 மணிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு செல்கிறது. இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் தூத்துக்குடி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசிய நபர் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படுவதற்கு 10 நிமிடத்திற்கு முன்பு ரயில் நிலையத்தில் இருந்த வெடிகுண்டு பெட்டி வெடிக்கும் என்று கூறி விட்டு போன் தொடர்பை துண்டித்து விட்டார்.

உடனடியாக தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் மத்தியபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஐயப்பன், சப் இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாள் மற்றும் போலீசார் ரயில் நிலையத்துக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசாரம் சேர்ந்து அந்த மர்ம நபர் வெடி குண்டு இருக்கும் இடத்தை போனில் சொன்னது போல் தேடினார்கள். மேலும் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ரயில் நிலையத்துக்கு வந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். 

இந்த நிலையில் பயணிகள் ரயில் நிலையத்துக்கு வர தொடங்கினார்கள். அவர்களை கடும் சோதனைக்கு பின்னாடி அனுமதித்தனர். மேலும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் உள்ள 24 பெட்டிகளையும் சல்லடை போட்டு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் போலீசார் ரயில் பயணிகள் அனைவரும் நிம்மதி அடைந்தனர். மேலும் 8.15க்கு செல்ல வேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் அரை மணி நேரம் தாமதமாக 8.45 மணிக்கு புறப்பட்டு சென்றது.

போனில் பேசிய அந்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் குரும்பூர் அருகே உள்ள சேதுக்குவாய்க்கால் கிராமத்தில் இருந்து அந்த போன் வந்தது தெரியவந்தது. உடனடியாக குரும்பூர் காவல் நிலைய போலீசார் அந்த கிராமத்துக்கு சென்று போனில் பேசிய மணி மகன் கணேசமூர்த்தி (42) என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் அவரிடம் ஒரு வெடிகுண்டு பெட்டி இருப்பதாக போனில் தெரிவிப்பது போல் அவரது வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தினார்கள் சோதனையில் வெடிகுண்டு பெட்டி எதுவும் சிக்கவில்லை. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள் இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

கார் மோதி முதியவர் பலி: டிரைவர் கைது

செவ்வாய் 3, அக்டோபர் 2023 11:05:01 AM (IST)

Sponsored Ads




Arputham Hospital









Thoothukudi Business Directory