» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மேம்பாலம் பணிகள்: நவ.2 முதல் போக்குவரத்து மாற்றம் - ஆட்சியர் தகவல்!

செவ்வாய் 1, நவம்பர் 2022 3:52:29 PM (IST)

தூத்துக்குடியில் மேம்பாலம் பணிகளில்  32 ராட்சஷ காண்கிரிட் தூண்கள் பொருத்தும் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (நவ.2) முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

இது தொடர்பாக வெளியிட்ட  மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம், திருச்செந்தூர் வஉசி துறைமுகம், ஸ்பிக் செல்லும் ரவுண்டானாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினால் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேற்படி பாலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் சாலைபணிகள் முடிக்கப்பட்டு மத்தியில் ராட்சஷ காண்கிரிட் தூண்கள் 32 எண்ணம் அதற்கான இடத்தில் பொறுத்தும் பணி மிகவும் முக்கியமானது ஆகும். 

மிகுந்த கவனத்துடன் இப்பணிகளை செய்வதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர், தூத்துக்குடி திட்ட செயலாக்க பிரிவு முனைப்புடன் அதற்கான ஆயத்த பணிகளை செய்து மேற்படி  பாலம் 2023 பெப்ரவரி மாத்த்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்நேர்வில் இப்பாலம் அமைப்பதில் முக்கிய பணியான 32 தூண்களை பொறுத்தும் பணி 2.11.2022 முதல் 11.11.2022 வரை நடைபெறவுள்ளது.

•முதல் 5 தினங்கள் 2.11.22 முதல் 6.11.2022 பாலத்தின் வடக்கு புறத்தில் வேலை நடைபெறுவதால் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியிலிருந்து வரும் இரயில்வே மேம்பாலம் வழி அடைக்கப்படுகிறது:

• இந்நேர்வில் 2.11.2022 முதல் 6.11.2022 வரை காமராஜ் கல்லூரி சாலை வழியாக திருச்செந்தூர் ரவுண்டானா (பாலம் கட்டப்படும் இடத்திற்கு ) வரும் அனைத்து வாகனங்களும் மாற்று வழியாக பீச் ரோடு ரோச் பூங்கா வழியாக துறைமுகசபை விருந்தினர் விடுதி, ஸ்பிக், டாக் இணைப்புச்சாலை வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையை அடையலாம்.

• மதுரையிலிருந்து வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை வழியாக தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் மற்றும் திருச்செந்தூர் செல்லும் கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பாலத்தின் தெற்கு பகுதியில் உள்ள சர்வீஸ் ரோட்டின் வழியாக செல்ல வழி வகை செய்யப்பட்டுள்ளது,

• திருச்செந்தூரிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் (மதுரை மற்றும் திருநெல்வேலி சாலை செல்லும் வாகனங்கள்) பாலத்தின் தெற்கு பகுதியில் உள்ள ஏற்கனவே உள்ள சர்வீஸ் ரோடு சாலையை பயன்படுத்தி கொள்ளலாம்.

• திருச்செந்தூரிலிருந்து வஉசி துறைமுகத்திற்கு செல்லும் வாகனங்கள் ஸ்பிக் டாக் துறைமுக சபை விருந்தினர் இல்லம் வழியாக செல்ல வேண்டும்.

• 7.11.2022 முதல் 11.11.2022 வரை பாலத்தின் தெற்கு புறத்தில் ராட்சஷ காண்கிரிட் தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெறும். அவ்வமயம், சாலைபோக்குவரத்து கீழ்கண்டவாறு மாற்று வழியில் விடப்படுகிறது.

• திருச்செந்தூரிலிருந்து வஉசி துறைமுகத்திற்கு செல்லும் வாகனங்கள் ஸ்பிக் டாக் துறைமுக சபை விருந்தினர் இல்லம் வழியாக செல்ல வேண்டும்.

• தூத்துக்குடி காமராஜ் கல்லூரியிலிருந்து வரும் இரயில்வே மேம்பாலம் வழி. இந்நேர்வில் 7.11.2022 முதல் 11.11.2022 வரை காமராஜ் கல்லூரி சாலை வழியாக திருச்செந்தூர் ரவுண்டானா (பாலம் கட்டப்படும் இடத்திற்கு ) வரும் அனைத்து வாகனங்களும் மாற்று வழியாக பீச் ரோடு ரோச் பூங்கா வழியாக துறைமுகசபை விருந்தினர் விடுதி, ஸ்பிக், டாக் இணைப்புச் சாலை வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையை அடையலாம்.

• தூத்துக்குடி வஉசி துறைமுகசபையிலிருந்து பாலத்தினை கடந்து செல்ல வரும் அனைத்து வகனங்களும் பாலத்தின் வடக்கு புறத்தினை பயன்படுத்தி மதுரை மற்றும் திருநெல்வேலி சாலைக்கும் செல்லலாம்.

• மதுரையிலிருந்து வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை வழியாக தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் மற்றும் திருச்செந்தூர் செல்லும் கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் பாலத்தின் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள தெற்கு பகுதியில் உள்ள சர்வீஸ் ரோட்டினை பயன்படுத்தி செல்ல வழி வகை செய்யப்பட்டுள்ளது.

• திருச்செந்தூரிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் (மதுரை மற்றும் திருநெல்வேலி மார்க்கமாக செல்லும் வாகனங்கள்) பாலத்தின் தெற்கு பகுதியில் உள்ள ஏற்கனவே உள்ள சாலையை பயன்படுத்தி கொள்ளலாம்.

மேற்படி  மேம்பாலம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தினை எட்டும் நிலையில் உள்ளது. எனவே, பொதுமக்கள் மேற்படி மாற்று வழியை பயன்படுத்தியும், மேம்பாலப் பணிகள் நடைபெறும் இடத்தினை அடைவதை தவிர்த்து தேவையற்ற வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடிகளை ஏற்படுத்தாது தக்க ஒத்துழைப்பை தந்து உதவிடவும் மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

ராஜாNov 3, 2022 - 11:47:52 AM | Posted IP 162.1*****

good

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory