» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் அமைய மாநகராட்சி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு: மேயர் அறிவிப்பு

வெள்ளி 28, அக்டோபர் 2022 12:53:00 PM (IST)தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் அமைவதற்கு மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். 

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணை மேயர் ஜெனிட்டா, ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலையில்  நடைபெற்றது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது பகுதிகளுக்கு தேவையானது குறித்து பேசினார்கள்.  கூட்டத்தில் சிவந்தாகுளத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுதல், முத்தம்மாள் காலனியில் புதிய ரேஷன் கடை கட்டுதல், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 434 தனிநபர் கழிப்பிடங்கள் அமைக்க மான்ய நிதி அளிக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

கூட்டத்தில்உள்ளாட்சி அமைப்பு திட்டப் பணிகளுக்கு மானியம் பெறுவதற்கு மாநில உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு சொத்து வரி விதிப்பில் முன்னேற்றம் காண்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.எனவே சொத்துவரி, காலிமனை வரி சீராய்வு செய்வதற்கு மாநகராட்சி பகுதிகளில் கட்டப்படும் குடியிருப்பு பகுதிகளுக்கு அவற்றின் அமைவிடம், கட்டுமானத்தின் தன்மை அடிப்படையில் பரப்பளவிற்கு ஏற்றவாறு 4 வகைகளாக பிரித்து சொத்து வரி சீராய்வு செய்ய வேண்டும்.

அதன்அடிப்படையில் கடந்த ஏப்ரல் 12-ந் தேதி தீர்மானத்தின்படி, தூத்துக்குடி மாநகராட்சியில் 1-4-2022 முதல் காலிமனை வரி உயர்வு செய்து பொது சீராய்வு மேற்கொள்ள மண்டலங்கள் வாரியாக புதிய வரியும், பொது சீராய்வு மேற்கொள்ள அனுமதி கோருதல், உள்ளாட்சி அமைப்பு களில் நிர்வாகத்தை வலுப்ப டுத்தவும், பொதுமக்களின் பங்கேற்பு வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தவும் மாநகராட்சி சட்டப்பிரிவுகளின்படி வார்டு குழு மற்றும் பகுதிசபா அமைக்க அரசாணை மற்றும் அரசிதழ் அறிக்கையினை மாமன்றத்தில் சமர்ப்பித்தல் உட்பட பல தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டது,

துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் பேசுகையில்: மாநகராட்சி மையப் பகுதியில் குரூஸ் பர்னாந்திற்கு மணிமண்டபம் அமைப்பதற்கு முழுமையாக உதவி புரிந்த கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 

பின்னர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் தமிழக அரசு அறிவித்துள்ளபடி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. வரும் 1ம் தேதி உள்ளாட்சி தினம் கடைபிடிக்கப்படும். 3 மாதத்திற்கு ஒருமுறை மாநகராட்சி கூட்டமும் நடைபெறும். குருஸ் பர்னாந்து மணிமண்டபம் அமைவதற்கு மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் என்றார். 

மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, செயற்பொறியாளர் அசோகன், உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ்;, திட்டம் ரெங்கநாதன், உதவி ஆணையர்கள் தனசிங், காந்திமதி, சேகர், நகர்நல அலுவலர் அருண்குமார், மற்றும் கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர். அதிமுக எதிர்கட்சித்தலைவர் வீரபாகு தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் சில குற்றச்சாட்டுக்களை கூறி வெளிநடப்பு செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory