» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தந்தை - மகன் கொலை வழக்கு : தலைமைக் காவலர் சாட்சியம்!
சனி 24, செப்டம்பர் 2022 8:36:51 PM (IST)
சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணையில் தந்தை- மகனை அடிக்கப் பயன்படுத்திய லத்தி, சிலம்பம் கம்பை அடையாளம் காட்டி தலைமை காவலர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையானது இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக விசாரணை நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை மத்திய சிறையில் உள்ள முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்ட 9 காவலர்களும் நேரில் ஆஜராகினர்.
வழக்கில் சாட்சிய விசாரணை தொடங்கியபோது தலைமை காவலர் பியூலா செல்வகுமாரி நேரில் ஆஜராகி ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் அடிக்கப் பயன்படுத்திய லத்தி மற்றும் சிலம்பு கம்பு போன்றவற்றை நீதிபதி முன்பு அடையாளம் காட்டினார்.
அதன்பின்னர் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் காவலர் முத்துராஜாவின் வழக்கறிஞர் மற்றும் முன்னாள் ஆய்வாளர் ஶ்ரீதர் ஆகியோர் தரப்பில் குறுக்கு விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து எதிரிகள் தரப்பின் குறுக்கு விசாரணைக்காக வரும் 26 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!
புதன் 27, செப்டம்பர் 2023 12:49:18 PM (IST)

சாலையில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகை பவளப்பாம்பு: வனத்துறையிடம் ஒப்படைப்பு!
புதன் 27, செப்டம்பர் 2023 12:03:10 PM (IST)

திருச்செந்தூரில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு: போராட்டம் நடத்த ஊர் மக்கள் முடிவு
புதன் 27, செப்டம்பர் 2023 11:16:00 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் மீது கார் மோதல்: வாலிபர் பலி!
புதன் 27, செப்டம்பர் 2023 10:54:11 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை : கோட்டாட்சியர் விசாரணை!
புதன் 27, செப்டம்பர் 2023 10:47:50 AM (IST)

பைக் விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலி!
புதன் 27, செப்டம்பர் 2023 10:40:33 AM (IST)
