» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா : அரசியல் கட்சியினர் மரியாதை!

சனி 24, செப்டம்பர் 2022 3:17:36 PM (IST)தூத்துக்குடியில் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பத்திரிகை, கல்வி, ஆன்மீகம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்துள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடியில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவ படத்திற்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐஎன்டியூசி மாநில பொது செயலாளர் கே பெருமாள்சாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் வர்த்தக காங்கிரஸ் பிரிவு தலைவர் டேவிட் பிரபாகரன், அமைப்பு சாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி, தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ்,   டிசிடியூ மாநகர தலைவர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், ஊடகபிரிவு சுந்தராஜ், மாநகர துணை தலைவர் நேரு, மாநில பேச்சாளர் அம்பிகாபதி, மாநகர் செயலாளர் இக்னேஷியஸ், தெர்மல் முத்து, தனசேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா, வெள்ளப்பட்டி ஜேசுதாசன் பேரையா, சேகர், சுந்தர்ராஜ், மகிளா காங்கிரஸ் உமா மகேஸ்வரி, இளைஞர் காங்கிரஸ்  நம்பி சங்கர், மீனவரணி மிக்கேல் குரூஸ், முத்து, ஜெபமாலை, ஏசுதாஸ் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் ஜெயமணி,  உட்பட மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

அமமுக 


அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பிரைட்டர் ஆலோசனைப்படி தூத்துக்குடி மாநகரம் 30வது வட்ட கழகம் சார்பில் பா.சிவந்தி ஆதித்தனார் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் சின்னச்சாமி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வீர புத்திரன், வட்ட செயலாளர் காசிலிங்கம்,  வட்ட பிரதிநிதி கலாசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory