» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குலசை தசரா திருவிழா 26-ம் தேதி தொடங்குகிறது: கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

வெள்ளி 23, செப்டம்பர் 2022 3:24:29 PM (IST)



குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 26-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். பல லட்சம் பக்தர்கள் வேடமணிந்து தங்களது வேண்டுதலை செலுத்தும் இத்திருவிழா வருகின்ற 26-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தசரா திருவிழாவில் தினந்தோறும் கோவிலில் சமய சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி சுவாமி எழுந்தருளல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் தினசரி நடைபெறும். வருகிற அக்டோபர் மாதம் 5-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள கடற்கரைக்குச் சென்று அங்கு மகிஷாசூரசம்ஹாரம் நடைபெறும். இதை காண பல லட்சம் பக்தர்கள் கூடுவார்கள். இத்திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடி மாவட்ட அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறையினர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அறநிலைய துறை கமிஷனர் குமரகுருபரன் மற்றும் அறநிலை துறை அதிகாரிகள் நேற்று இரவு 9 மணி அளவில் திடீரென குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வருகை தந்தனர். பின்னர் அமைச்சர்கள், பக்தர்கள் மற்றும தசரா குழுக்கள் வரும் பாதை, போக்குவரத்து வசதி எப்படி செய்யப்பட்டு இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

பக்தர்கள் எந்த இடையூறும் இல்லாமல் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனைத்து வசதிகளையும் செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் அமைச்சர்கள் கூறினர். அப்போது உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் கைது

ஞாயிறு 25, செப்டம்பர் 2022 10:39:51 AM (IST)

பணி நேரத்தில் போதை : மின் ஊழியர் சஸ்பெண்ட்

ஞாயிறு 25, செப்டம்பர் 2022 10:35:13 AM (IST)

Sponsored Ads


Arputham Hospital








Thoothukudi Business Directory