» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாற்றுக்கட்சியினர் 1000 பேர் கனிமொழி எம்.பி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்!

வெள்ளி 23, செப்டம்பர் 2022 3:11:51 PM (IST)தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சியினர் 1000 பேர் கனிமொழி எம்.பி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட கடம்பூர் பேரூராட்சி மன்ற உறுப்பினராக அதிமுகவை சேர்ந்த எஸ்.வி.பி.எஸ். நாகராஜா, 1வது வார்டு, 2 வது வார்டு அவரது மனைவி ராஜேஸ்வரி, 12வது வார்டு சிவக்குமார், ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி கலைஞர் அரங்கில், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்ற விழாவில், கனிமொழி எம்.பி முன்னிலையில் 1000பேர் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். 

விழாவில் மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி, ஒன்றிய செயலாளர்கள் சின்னப்பாண்டியன், சுப்பிரமணியன், கருப்பசாமி, சின்னமாரிமுத்து, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, கடம்பூர் பேரூர் செயலளார் பாலகுமார், மற்றும் விஸ்வநாத ராஜா, கற்பகராஜா, சுந்தரராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜா, போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் அல்பட், மற்றும் கருணா, மணி, பிரபாகர், ஜோஸ்பர், மாரியப்பன், முருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory