» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆசிரியர் வீட்டில் 5½ பவுன் நகை, பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

வெள்ளி 23, செப்டம்பர் 2022 11:54:38 AM (IST)

எட்டயபுரம் அருகே ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து 5½ பவுன் நகை, ரூ.40 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களைபோலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் கான்சாபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் மாடசாமி (56). இவர் என். வேடபட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி உமாவும் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில் தூங்கச் சென்றனர். நேற்று காலை மாடியில் இருந்து இறங்கி வந்தபோது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. 

மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5½ பவுன் நகை, ரூ.40 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக புகாரின் பேரில் எட்டயபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்து விஜயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தற்கு சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் கைது

ஞாயிறு 25, செப்டம்பர் 2022 10:39:51 AM (IST)

பணி நேரத்தில் போதை : மின் ஊழியர் சஸ்பெண்ட்

ஞாயிறு 25, செப்டம்பர் 2022 10:35:13 AM (IST)

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory