» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போலி ஆவணம் மூலம் நிலமோசடி : மேலும் 3பேர் கைது!

வெள்ளி 23, செப்டம்பர் 2022 11:17:12 AM (IST)

எட்டயபுரம் பகுதியில் போலி ஆவணம் மூலம் நிலங்களை கிரையம் செய்த வழக்கில் மேலும் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். .

தேனி மாவட்டம் போடி நாயக்கனூரை சேர்ந்தவர் மயில்வாகனன். இவர் ஒரு தனியார் நிறுவனத்துக்கு எட்டயபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட ஆத்திகிணறு, போடுபட்டி, லக்கம்மாள்தேவி, புங்கவார்நத்தம், விகாம்பட்டி மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் நிலம் வாங்கி கொடுத்தாராம். இதில் நிலத்தை விற்பனை செய்ய விரும்பாத விவசாயிகளின் நிலத்தையும் போலி ஆவணம் தயாரித்து தனியார் நிறுவனத்துக்கு கொடுத்து மயில்வாகனன் மற்றும் அவரது கூட்டாளிகள் மோசடி செய்து உள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில் நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மயில்வாகனனை கைது செய்தனர். தொடர்ந்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில சிறையில் அடைத்தனர்.  

இந்நிலையில், போலியான பொது அதிகார ஆவணம் மற்றும் கிரைய ஆவணங்களில் ஆள்மாறாட்டம் செய்த நபர்களை ஏற்பாடு செய்த சாத்தூர் தாலுகா என்.குமாரபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராக்கன் மகன் மாரிமுத்து (45), கோவில்பட்டி தாமஸ் நகரைச் சேர்ந்த ரத்தினம் மகன் பவுல்ராஜ் (53) என்பவரையும், கிரைய ஆவணத்தில் சாட்சியாக கையொப்பமிட்ட சாத்தூர், பெருமாள் கோவில் தெற்கு மாடவீதியைச் சேர்ந்த குமார் மகன் மணிகண்டன் (23) என்பவரையும், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தேவி தலைமையில், உதவி ஆய்வாளர்கள் காமராஜ், விஜயகுமார், முதல் நிலைக் காவலர்கள் சித்திரைவேல் மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோர் அடங்கிய காவல் துறையினர் இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பியுள்ளனர. மேலும் இதுகுறித்து நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் கைது

ஞாயிறு 25, செப்டம்பர் 2022 10:39:51 AM (IST)

பணி நேரத்தில் போதை : மின் ஊழியர் சஸ்பெண்ட்

ஞாயிறு 25, செப்டம்பர் 2022 10:35:13 AM (IST)

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory