» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காய்ச்சல் ஏற்படுபவர்கள் 3 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

வெள்ளி 23, செப்டம்பர் 2022 10:50:03 AM (IST)

பருவநிலை மாற்றத்தால் தற்போது காய்ச்சல் ஏற்படுபவர்கள் 3 நாட்கள், 4 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது என  அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் முடிவுற்ற கட்டிடப்பணிகளை திறந்து வைப்பதற்காக அமைச்சர் மா. சுப்பிரமணியன் விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

3 நாட்கள் இருக்கும் இந்த காய்ச்சலானது பருவநிலை மாற்றத்தால் மட்டுமே ஏற்படுகிறது என்றாலும் இந்த காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் ஏற்படுபவர்கள் 3 நாட்கள், 4 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது. எந்தெந்த பகுதியில் 3 பேருக்கு அதிகமான நபர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதோ அந்த இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதம் 30-ந் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசிகள் இலவசம் என்ற மத்திய அரசின் அறிவிப்பின்படி தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வருகிற 25-ந்தேதி 50 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. 

தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார சுகாதார நிலையங்கள் என 1,133 மருத்துவமையங்களில் வருகிற புதன்கிழமை தடுப்பூசி போடும் பணி நடைபெறும். 14 முதல் 17 வயது வரையிலான மாணவ, மாணவிகளுக்கு வருகிற 4-ந் தேதி பள்ளிகளில் சென்று தடுப்பூசி செலுத்தப்படும். தமிழகத்தில் 96 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 91 சதவீதம் பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த 4,308 காலி பணியிடங்கள் உள்ளன. அவை அனைத்தும் 2 மாதத்திற்குள் முழுமையாக நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory