» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அதிமுக திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டி திமுக ஆட்சி : முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேச்சு!

வெள்ளி 23, செப்டம்பர் 2022 10:20:40 AM (IST)"எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை, திமுக ஆட்சியில் கொண்டுவந்ததாக நாடாகமாடி வருகிறார்கள்" என தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பேசினார்.
      
தூத்துக்குடி அதிமுக சார்பில் அண்ணா 114வது பிறந்தநாள் விழா டூவிபுரம் மெயின் ரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஜோதிமணி தலைமை வகித்தார். மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளரும் மாநகராட்சி எதிர்கட்சி தலைவருமான வீரபாகு,  பகுதி செயலாளர்கள் பொன்ராஜ், சேவியர், முருகன், ஜெய்கணேஷ், மாநகராட்சி எதிர்கட்சி கொறடா மந்திரமூர்த்தி, கவுன்சிலர்கள் வெற்றிச்செல்வன், பத்மாவதி, ஜெயராணி, ஜெயலட்சுமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முன்னாள் கவுன்சிலர் செண்பக செல்வன் வரவேற்புரையாற்றினார்.
     
கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் பேசுகையில் "அதிமுக ஆட்சியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இடைக்கால பொதுச் செயலாளர் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டு தான் செய்தது போல் நாடாகமாடி வருகிறார், சோதனையை கடந்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சாதனையை படைப்பார். இபிஎஸ் பக்கம் தான் 99 சதவீதம் பேர் இருக்கின்றனர். 

அவர் தலைமையேற்றபின் விலைவாசி உயர்வு மின்சார கட்டணம், என பல ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளோம். துரோகிகளால் ஓரு கூட்டமும். போராட்டமும் நடத்த முடியவில்லை. நடத்தவும் முடியாது, பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் தொண்டர்கள் என அனைவரும் இபிஎஸ் பக்கம் தான் உள்ளனர். ஒன்றை கோடி தொண்டர்களை வழிநடத்தும் வல்லமை படைத்தவர் இபிஎஸ், ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். ஜெயலலிதா மறைவிற்கு பின்பு சசிகலா முதல்வராக பதவியேற்க நினைத்தார். 

நீதிமன்ற தீர்ப்பின் மூலம் சிறை சென்றதும் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றர். அப்போது சட்டமன்றத்தில் அவருக்கு எதிராக நான் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் அப்போது எதிர்த்தோம். சசிகலா மூலம் தினகரன் பின்னால் 18 எம்.எல்.ஏக்கள் சென்றனர். ஆனால் அவர்கள் பதவி பறிக்கப்பட்டது. அப்போது ஓபிஎஸ் நான் உள்பட 11 பேரையும் இபிஎஸ் நினைத்திருந்தால் எங்களை அட்ரஸ் இல்லாமல் ஆக்கியிருக்க முடியும்  ஆனால் எங்களை அரவணைத்து அனாதையாக்காமல் அனைவரையும் ஒருங்கிணைத்து ஜெயலலிதா வழியில் கட்டுகோப்பாக கட்சியை வழிநடத்தி வருகிறார். 

தமிழக மக்களுக்காக பாடுபடும் கட்சியாக அதிமுக இருக்கிறது. எதிர்வரும் தேர்தலையும் எதிர்கொண்டு எடப்பாடி வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவார். அவருக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும். அண்ணாவின் வழியில் அவரது கொள்கைகளை தாங்கி வெற்றிக்கனியை பறிப்போம். தமிழக அரசு எந்த தி;ட்டத்தையும் புதிதாக செய்யவில்லை என்று பேசினார். பின்னர் 250 பேருக்கு சேலை வழங்கினார். தலைமை பேச்சாளர்கள் தீப்பொறி முருகேசன், வைகை பாண்டி, ஞானதாஸ், உள்பட பலர் பேசினார்கள்.

கூட்டத்தில் அமைப்பு செயலாளர் சின்னத்துரை, மருத்துவ அணி செயலாளர் ராஜசேகர், அவைத்தலைவர் திருபாற்கடல், மாவட்ட துணை செயலாளர் சந்தனம், இணைச்செயலாளர் செரினா பாக்கியராஜ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேகர், தொழிற்சங்க செயலாளர் ராஜா, இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாணவரணி செயலாளர் விக்ணேஷ், சிறுபான்மைபிரிவு செயலாளர் பிரபாகர், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அருண்ஜெபக்குமார், இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர்கள் சத்யாலட்மணன், முருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

திருச்செந்தூர் முருகர்Sep 23, 2022 - 04:08:22 PM | Posted IP 162.1*****

எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் மிகவும் திறமையானவர், அடுத்த தேர்தலில் திருச்செந்தூர் முருகன் அருளால் நீங்கள் வெற்றிவாகை சூடி இந்து அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்று எங்கள் ஊருக்கு பெருமை தருவீர்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory