» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் திடீர் சாலை மறியல்: தூத்துக்குடியில் பரபரப்பு!

வியாழன் 22, செப்டம்பர் 2022 4:09:10 PM (IST)தூத்துக்குடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழகத்தில் சென்னை, கோவை, ஏர்வாடி, தேனி, கடலூர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் மத்திய புலனாய்வு அமைப்பான என்ஐஏ அதிரடி சோதனை ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் அதன் நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தூத்துக்குடி நிர்வாகிகள், தொண்டர்கள், இன்று காலை டபிள்யூஜிசி ரோட்டில் பள்ளிவாசல் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மத்தியபாகம் சப் இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory