» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிப்காட் விரிவாக்கம்: ஆட்சியர் நேரில் ஆய்வு
வியாழன் 22, செப்டம்பர் 2022 3:44:27 PM (IST)

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் சிப்காட் விரிவாக்கத்திற்கு தேவையான இடங்களை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலத்தட்டப்பாறை பகுதி, கீழத்தட்டப்பாறை ஊராட்சிக்குட்பட்ட உப்பாத்து ஓடைகள் ஆகிய பகுதிகளிலும், சில்லாநத்தம் ஊராட்சிக்குட்பட்ட நயினார்புரம் பகுதியிலும் சிப்காட் விரிவாக்கத்திற்கு தேவையான இடங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கீழத்தட்டப்பாறை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பள்ளிக்கு செல்ல பேரூந்துக்காக காத்திருந்த மேலத்தட்டப்பாறை, ஊராட்சி ஒன்றியம் பள்ளி மாணவர்களிடம், பேருந்து வசதிகள் குறித்தும், பள்ளி வகுப்பு தொடங்கும் கால நேரம் குறித்து கேட்டறிந்ததோடு மாணவர்களுடன் கலந்துரையாடினார். மேலும் பேருந்து நிறுத்தத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள கீழத்தட்டப்பாறை ஊராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிக்கு சென்று அங்கு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கியது குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்ததோடு, மாணவர்களிடமும் காலை உணவு வழங்கப்பட்டது குறித்து பரிவுடன் கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் (சிப்காட்) லதா, சிறப்பு வட்டாட்சியர் (நிலம்) பிரபாகரன், வட்டாட்சியர்கள் சிவக்குமார், அமுதா, அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அக்.5ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 12:37:35 PM (IST)

காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் முப்பெரும் விழா: நலதிட்ட உதவிகள் வழங்கல்!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 12:22:59 PM (IST)

தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் 3 பைக் திருட்டு : வாலிபர் கைது!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 11:12:06 AM (IST)

கார் மோதி முதியவர் பலி: டிரைவர் கைது
செவ்வாய் 3, அக்டோபர் 2023 11:05:01 AM (IST)

தூத்துக்குடியில் காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 10:41:27 AM (IST)

தமிழ்நாட்டில் அனைத்து அதிகாரங்களும் ஒரு குடும்பத்தின் பிடியில் உள்ளது: கிருஷ்ணசாமி
செவ்வாய் 3, அக்டோபர் 2023 10:15:10 AM (IST)
