» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 20 பவுன் நகை, ரூ.2லட்சம் கொள்ளை : பட்டப்பகலில் துணிகரம்!

வியாழன் 22, செப்டம்பர் 2022 8:13:15 AM (IST)



தூத்துக்குடியில் பூவியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ.2லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி டூவிபுரம் 5வது தெருவைச் சேர்ந்தவர் பிச்சையா மகன் சித்திரைவேல் (45). இவரது மனைவி கல்பனா. சித்திரைவேல் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே பூக்கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் 2 மணிக்கு கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு பூக்கடைக்கு சென்று விட்டனர். இரவு 10 மணிக்கு மீண்டும் வீட்டுக்கு வந்தபோது கதவில் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப் பணம் திருடு போயிருந்தது. 

கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும். இந்த சம்பவம் குறித்து மத்தியபாகம் காவல் நிலையத்தில் சித்திரைவேல் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஐயப்பன், சப் இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வீட்டில் தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தூத்துக்குடியில் பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory