» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடும்பத்துடன் காட்டுப்பகுதியில் குடியேறிய மக்கள் : விளாத்திகுளம் அருகே பரபரப்பு

புதன் 21, செப்டம்பர் 2022 10:45:49 AM (IST)விளாத்திகுளம் அருகே குழந்தைகள், குடும்பத்துடன் காட்டுப் பகுதியில் குடியேறி பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம்  அருகே வெம்பூர் ஆண்டாள் நகர் பகுதியில் தனி நபருக்காக பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தங்களது  கை குழந்தைகள்,  குடும்பத்துடன் கிராமத்தை விட்டு வெளியேறி  காட்டு பகுதியில் உள்ள மரத்தடியில்  சமைத்து குடியேறி  போராட்டம் நடத்தினார்.

தகவல் அறிந்து எட்டையபுரம் வட்டாச்சியர் கிருஷ்ணகுமாரி, புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபாலன், மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடியிருப்பு பகுதியில் வழியாக சாலை அமைக்க கூடாது  மரங்களை வெட்டக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அதிகாரியுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதியளித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory