» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை: போலீஸ் விசாரணை

புதன் 21, செப்டம்பர் 2022 8:27:37 AM (IST)

பசுவந்தனை அருகே பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே உள்ள சில்லாங்குளம் கிராமத்தில்  முத்துக்கருப்பன் நினைவு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ராமநாதபுரம் மாவட்டம் அண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த ராமநாதன் மகள் வைத்தீஸ்வரி (17) பிளஸ் 2 படித்து வருகிறார். மேலும் பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி உள்ளார். நேற்று இரவு 10 மணியளவில் சக மாணவியுடன் பேசிக் கொண்டிருந்த வைத்தீஸ்வரி பாத்ரூம் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

வெகுநேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால் சக மாணவிகள் அவரை தேடிச் சென்றனர். பாத்ரூம் சென்று கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. உடனடியாக விடுதி வார்டனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விடுதி வார்டன் மற்றும் மாணவிகள் கதவை உடைத்து உள்ளே பார்க்க போது மாணவி வைத்தீஸ்வரி, துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.  இதுகுறித்து பசுவந்தனை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மாணவி, சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது சம்பந்தமாக மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் தெரியவில்லை. இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது இதனால் பள்ளியை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், மணியாச்சி டிஎஸ்பி உலகநாதன் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital




Thoothukudi Business Directory