» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண் கொலை வழக்கில் ஒரு மாதத்துக்கு பின் துப்பு துலங்கியது: எதிர்வீட்டு ஆசாமி சிக்கினார்!

புதன் 21, செப்டம்பர் 2022 8:19:19 AM (IST)

உடன்குடி அருகே தனியாக இருந்த பெண்ணை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த கட்டிட தொழிலாளியை ஒரு மாதத்துக்கு பின் போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி புதுமனை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சுயம்பு. பனைத்தொழிலாளி. இவரது மனைவி சுயம்புகனி (55). இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ள னர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே சென்னையில் வசித்து வருகின்றனர். சுயம்பு தைக்காவூரில் தங்கியிருந்து பனை ஏறும் தொழில் செய்து வருகிறார். உடன்குடி வீட்டில் தனியாக சுயம்புகனி வசித்து வந்தார். 

இந்நிலையில் கடந்த மாதம் 16-ந் தேதி மதியம் 2 மணியளவில் அவரது சகோதரி முத்துவும் (45), அவரது கணவர் சேகரும் சுயம்புகனி வீட்டுபகுதியில் சென்றனர். அப்போது சுயம்புகனி வீடு பூட்டியிருந்துள்ளது. ஆனால் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியதால்,சந்தேகம்அடைந்த அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சுயம்புகனி உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். 

அவர் அணிந்திருந்த தங்க கம்மல், மூக்குத்தி மற்றும் கவரிங் நகைகளையும் காணவில்லை. எனவே அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், திருச்செந்தூர் டிஎஸ்பி ஆவுடையப்பன் மற்றும் குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர், அவரது எதிர்வீட்டில் வசித்து வரும் கட்டிட தொழிலாளியான உடன்குடி புது மனை கீழத்தெரு அரசு முத்து மகன் அரசன் (56) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், சுயம்புகனியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். போலீசார் அவரை கைது செய்தனர். 

கொலைக்கான காரணம் குறித்து அவர் போலீசாரிடம் கூறுகையில், கடந்த மாதம் 14-ந்தேதி சுயம்புகனியிடம் கைமாற்றாக ரூ.10 ஆயிரம் பணம் கேட்டேன். அவர் தரமறுத்ததால்,இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நான் சுயம்பு கனியை வீட்டிற்குள் தள்ளி விட்டதில் கீழே விழுந்த அவர் பலத்த காயமடைந்து சுயநினைவு இல்லாமல் கிடந்தார். அவரது கம்மல், வளையல், செயினை கழற்றிக் கொண்டு தப்பி ஓடிவிட்டேன். பின்னர் அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இதனால் பயந்து போன நான் தலைமறைவாக இருந்தேன் என அவர் வாக்குமூலத்தில் தெரிவித்தாக போலீசார் தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory