» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோயில் அறங்காவலர் குழு தலைவர், உறுப்பினர்கள் பதவியேற்பு!
வியாழன் 1, செப்டம்பர் 2022 12:22:18 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயில் அறங்காவலர் குழு தலைவருக்கான தேர்தலில் அருள் முருகன் வெற்றி பெற்றுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சாமி கோயல், முருகபெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திகழ்கிறது. கோவிலாகும். உலகப் புகழ்மிக்க இந்த கோயிலுக்கு 5 பேரை அறங்காவலர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது..
இதன்படி மாப்பிள்ளையூரணி, இந்திரா நகரைச் சேர்ந்த வி.செந்தில் முருகன், திருச்செந்தூர் மானாடு தண்டுபத்து, மேற்கு தெருவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யான கே.பி.கே.குமரன் மனைவி அனிதா குமரன், வடக்கு ஆத்தூர் கீழமுத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமதாஸ், சென்னை சாந்தோம், சல்லிவன் தெருவைச் சேர்ந்த இரா.அருள் முருகன், தூத்துக்குடி போல்பேட்டையை சேர்ந்த பா.கணேசன் ஆகிய 5 பேரை நியமித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தேர்வு, திருக்கோயில் இணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து இன்று காலை நடைபெற்றது. இதில் இணை ஆணையர் (கூ.பொ) ம.அன்புமணி முன்னிலையில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக செந்தில் முருகன், அனிதா குமரன், ராமதாஸ், அருள்முருகன், கணேசன் ஆகிய ஐந்து பேர் பதவியேற்று கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அறங்காவலர் குழு தலைவர் தேர்தல் தூத்துக்குடி உதவி ஆணையர் தி.சங்கர் முன்னிலையில் நடைபெற்றது. அறங்காவலர் குழு தலைவராக ரா.அருள்முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் தலைவர் பதவியேற்றுக் கொண்டார். கூடுதல் ஆணையர் கண்ணன் உள்ளிட்ட அறநிலையத் துறையினர், திருக்கோயில் பணியாளர்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் 3 பைக் திருட்டு : வாலிபர் கைது!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 11:12:06 AM (IST)

கார் மோதி முதியவர் பலி: டிரைவர் கைது
செவ்வாய் 3, அக்டோபர் 2023 11:05:01 AM (IST)

தூத்துக்குடியில் காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 10:41:27 AM (IST)

தமிழ்நாட்டில் அனைத்து அதிகாரங்களும் ஒரு குடும்பத்தின் பிடியில் உள்ளது: கிருஷ்ணசாமி
செவ்வாய் 3, அக்டோபர் 2023 10:15:10 AM (IST)

பைக்கை சேதப்படுத்தி, வாலிபரை தாக்கிய 2பேர் கைது!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 8:12:19 AM (IST)

பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 3, அக்டோபர் 2023 8:08:47 AM (IST)

kumarSep 2, 2022 - 01:18:40 PM | Posted IP 162.1*****