» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரூ.3.06 கோடியில் காற்றின் தரத்தை மேம்படுத்த பணிகள் : மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

வெள்ளி 26, ஆகஸ்ட் 2022 3:25:19 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மானிய தொகை ரூ.3.06 கோடி மூலம் தூத்துக்குடி நகரின் காற்றின் தரத்தை மேம்படுத்த பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தூத்துக்குடி மாநகராட்சியின் கூட்டம் மாநகர கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில இன்று நடைபெற்றது. ஆணையர் சாருஸ்ரீ, துணை மேயர்ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து பேசினார். 

தொடர்ந்து, மாநகராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுதல், கழிவு நீரில் வரும் கொசுபுழுக்களை ஒழிக்க ரூ.27 லட்சத்தில் மருந்து கொள்முதல் செய்தல், மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் பகுதி வாரியாக வடிகால் அமைக்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அனுமதி வழங்குதல், மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற புதிய ஜே.சி.பி. எந்திரம் வாங்குதல், மேற்கு மண்டலம் வி.வி.டி. சிக்னல் பகுதியில் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் ரவுண்டானா பகுதியில் நீரூற்று அமைத்து பசுமை புல்தரைகளுடன் அழகுபடுத்தும் பணி, 

தேசிய தூய காற்று திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தூத்துக்குடி மாநகராட்சிக்கு 2021-22-ம் ஆண்டு மானிய தொகை ரூ.3.06 கோடி ஒதுக்கீடு செய்து வரப்பெற்றுள்ளது. இதனை பயன்படுத்தி தூத்துக்குடி நகரின் காற்றின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல், மாநகர பகுதியில் விபத்து ஏற்படும் பகுதியில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து இரண்டு மடங்கு அபராதம் விதித்தல், மாநகராட்சி 60 வார்டுபகுதிகளில் உள்ள இரண்டு பேருந்து நிலையங்கள், 21 அலுவலக கட்டிடங்கள், 30 நீரேற்று நிலையங்கள், 60 பூங்காக்கள், 20 மாநகராட்சி பள்ளிகள், 8 அம்மா உணவகங்கள் உட்பட கட்டிடங்களில் மின் பழுது மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல் 

தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் அறிவித்திருப்பதையொட்டி தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 8 மாநகராட்சி பள்ளிகளில் 1முதல் 5ஆம் வகுப்பு படிக்கும் 272 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை முறைப்படுத்தி செயல்படுத்துவது உள்ளிட்டதீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு மொத்தம் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், பாலகுருசாமி, அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், பணிக்குழு தலைவர் கீதா முருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ் குமார், கல்விக் குழுத் தலைவர் அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரெங்கச்சாமி, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை, சந்திரபோஸ், வெற்றிச் செல்வன், விஜயலட்சுமி சுடலைமணி, மந்திரமூர்த்தி, உட்பட அனைத்து கவுன்சிலர்களும், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, அதிகாரிகள் ரூபன் சுரேஷ், பொன்னையா, சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன் உட்பட அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!

புதன் 27, செப்டம்பர் 2023 12:49:18 PM (IST)

பைக் விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலி!

புதன் 27, செப்டம்பர் 2023 10:40:33 AM (IST)

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory