» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாஞ்சாலங்குறிச்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 8:14:37 PM (IST)

பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சரவணன் முன்னிலையில் இன்று ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட சிலோன் காலனி இ-சேவை மையத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு செய்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும் கடந்த ஆகஸ்ட் 15ல் கிராம சபை கூட்டத்தின் பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் மீது ஆய்வு செய்தார்.
தொடர்ந்து சிலோன் காலனி வழியே செல்லும், உயர் மின்னழுத்த மின் கம்பி செல்லும் இடத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து பாஞ்சாலங்குறிச்சியில் ரேஷன் கடை, சமுதாய நலக்கூடத்தை ஆய்வு செய்தார். மேலும் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டையில், கட்டபொம்மனின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் ஒலி ஒளி காட்சி அமைப்பது குறித்தும் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் ராஜன், வட்டாட்சியர் நிஷாந்தினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடாசலம், பாண்டியராஜன், ஊராட்சி மன்ற தலைவர் கமலாதேவியோகராஜ், செயலர் சுப்பிரமணியன் மற்றும் அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அக்.5ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 12:37:35 PM (IST)

காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் முப்பெரும் விழா: நலதிட்ட உதவிகள் வழங்கல்!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 12:22:59 PM (IST)

தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் 3 பைக் திருட்டு : வாலிபர் கைது!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 11:12:06 AM (IST)

கார் மோதி முதியவர் பலி: டிரைவர் கைது
செவ்வாய் 3, அக்டோபர் 2023 11:05:01 AM (IST)

தூத்துக்குடியில் காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 10:41:27 AM (IST)

தமிழ்நாட்டில் அனைத்து அதிகாரங்களும் ஒரு குடும்பத்தின் பிடியில் உள்ளது: கிருஷ்ணசாமி
செவ்வாய் 3, அக்டோபர் 2023 10:15:10 AM (IST)
