» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு

புதன் 17, ஆகஸ்ட் 2022 5:47:47 PM (IST)

தூத்துக்குடியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற வருகிற 20ம் தேதி (சனிக்கிழமை)  நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி நகர் மின்வாரிய அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம், தூத்துக்குடி கேவிகே நகர் துணை மின் நிலையம் மற்றும் ஓட்டப்பிடாரம் துணை மின்நிலையத்தில் வருகிற 20ம் தேதி (சனிக்கிழமை)  மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பின்வரும் பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

போல்பேட்டை, ஆண்டாள்தெரு, சத்திரம்தெரு. (1ம் கேட், 2ம் கேட், மட்டக்கடை, வடக்கு பீச்ரோடு, விஇ ரோடு, பாலவிநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, மீனாட்சிபுரம், தாமோதரநகர், எட்டையாபுரம் ரோடு, தெப்பகுளம், சிவன் கோவில் தெரு. டபிள்யூ.ஜி.சி ரோடு, சண்முகபுரம், ஸ்டேட் பேங்க் காலனி, இஞ்ஞாசிரியார் புரம், எழில் நகர், அழகேசபுரம், முத்துகிருஷ்ணா புரம், குறிஞ்சி நகர், அண்ணா நகர், விவிடி மெயின் ரோடு. போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட் நகர், முத்தம்மாள் காலனி, கே.டி.சி. நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

ஓட்டப்பிடாரம் துணைமின் நிலையம்: 

ஓட்டப்பிடாரம், ஓசநூத்து, ஆரைக்குளம், குலசேகரநல்லூர். பாஞ்சாலங்குறிச்சி, வெள்ளாரம், க.சுப்பிரமணியபுரம். குறுக்குசாலை, புதியம்புத்தூர். சில்லாநத்தம், சாமிநத்தம், கொம்பாடி தளவாய்புரம், தெற்கு வீரபாண்டியபுரம். ஆவாரங்காடு, அகிலாண்டபுரம், முப்பிலிவெட்டி, பரும்பூர், வேடநத்தம், கே.குமாரபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

SelvamuruganAug 19, 2022 - 07:14:50 PM | Posted IP 162.1*****

எங்கள் பகுதியில் என்று மின்தடை பற்றி அறிந்து கொள்வது எப்படி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory