» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்குவாரி கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை: போலி ஆவணங்கள் இணைக்கப்பட்டதாக புகார்!

புதன் 17, ஆகஸ்ட் 2022 4:38:10 PM (IST)

காற்று, மண், நீர், ஒலி ஆகியவற்றை ஆய்வு செய்தாக போலி ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதால் வருகிற 20ம் தேதி நடைபெற உள்ள கல்குவாரி கருத்து கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் இரா.சா.முகிலன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம், தெற்கு இளந்தைகுளம் ஜாகிர் உசேன் கல்குவாரி தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் 20-08-2022 வியாழன் அன்று காலை அன்று நடைபெற உள்ளது.  காற்று -மண்- நீர்- ஒலி ஆகியவற்றை ஆய்வு செய்தாக முழுக்க போலியான ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளதால் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய கேட்டுக் கொள்கிறோம். 

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே, பத்மநாபமங்கலம் ஊராட்சியில் வெங்கடேஸ்வரா கல்குவாரி கருத்து கேட்புக் கூட்டம், பல்வேறு காரணங்களால், ரத்து செய்து கடைசி நாள் இரவில் கூட பலமுறை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. பத்மநாபமங்கலம் ஊராட்சியில் வெங்கடேஸ்வரா கல்குவாரி கருத்து கேட்புக் கூட்டம், சென்ற 28-07-2022 அன்றுதான் தூத்துக்குடி சத்யா மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

ஜாகிர் உசேன் கல்குவாரிக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை, சேலத்தைச் சார்ந்த ஜியோ எக்ஸ்ப்ளரேஷன் அண்ட் மைனிங் சொல்யூஷன்ஸ் சேலம் என்று நிறுவனம் தயாரித்து கொடுத்துள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு முழுமையான அறிக்கை நாமக்கல் ஒமேகா லேபரட்டரிஸ் என்ற நிறுவனத்தில் கொடுத்து அவர்களது லேபில் காற்று -மண்- நீர்- ஒலி ஆகியவை ஆய்வு செய்த முடிவுகளின் அறிக்கையாகும்.

நாமக்கல் ஒமேகா லேபரட்டரிஸ் என்ற நிறுவனத்தில் கொடுத்து பெற்ற ஆய்வறிக்கையின் முடிவுகளின் அடிப்படையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது முழுக்க முழுக்க மோசடியானதாகும். இப்படி இல்லாத, இயங்காத போலி நிறுவனப் பெயரில்தான் தற்போது 42 பக்க முடிவுகள் அடிப்படையில் அறிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது. எனவே மோசடியான ஆவணங்களை வைத்த இந்த அறிக்கையின் மீது கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தக் கூடாது, ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்,


மக்கள் கருத்து

தமிழன்Aug 18, 2022 - 01:51:42 AM | Posted IP 162.1*****

கருத்து கேட்புக் கூட்டத்தை ரத்து செய்து சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory