» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.20 லட்சம் பீடி இலைகள் தூத்துக்குடியில் பறிமுதல்!

புதன் 17, ஆகஸ்ட் 2022 10:50:20 AM (IST)



தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்தனர். 

தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும காவல் துணை கண்காணிப்பாளர் பிரதாபன், காவல் ஆய்வாளர் சைரஸ் ஆகியோரின் உத்தரவின் பேரில்  உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் முருகேசன், முதல் நிலை காவலர்கள், சுடலைமணி, சதன் ஸ்டார், பகவதி பாபு ஆகியோர் இன்று அதிகாலை வெள்ளப்பட்டி கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடற்கரையில் ஒரு படகு நின்று கொண்டிருந்தது. 

போலீசாரைக் கண்டதும் படகில் இருந்த சிலர், படகில் இருந்த மூட்டைகளை கடலுக்குள் வீசிவிட்டு கண்டதும் தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அந்த பண்டல்களை சோதனையிட்டபோது, அதில் சுமார் 2500 கிலோ எடை கொண்ட பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.20 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த பீடி இலைகள் இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory