» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் விதிகளை மீறும் கனரக வாகனங்கள்; போக்குவரத்து நெரிசல் - மாணவர்கள், பொதுமக்கள் அவதி

செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 10:14:18 AM (IST)



தூத்துக்குடி மாநகர் பகுதியில் விதிகளை மீறி வரும் கனரக வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மாணவ, மாணவிகள் அலுவலகம் செல்வோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

தொழில் நகரான தூத்துக்குடியில் நாளுக்கு நாள் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்த கனரக வாகனங்களின் போக்குவரத்தால் நகரின் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகர் பகுதியில் காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை கன ரக வாகனங்கள் நகருக்குள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த விதிகளை மீறி கனரக வாகனங்கள் வலம் வருகிறது.

தூத்துக்குடி 3வது மற்றும்  4வது ரயில்வே கேட் உள்பட மாநகராட்சியின் பல பகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து விதிகளை மீறி இயக்கப்படுகிறது. குறிப்பாக காலை 7 மணி முதலே லாரி, டாரஸ். கண்டெய்டனர் போன்ற பெரிய வாகனங்களில் மணல், ஜல்லி மற்றும் பிற இதர பொருட்களை கொண்டு செல்வதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், பிற வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். 

போக்குவரத்து நெரிசலால் மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல முடிவதில்லை. அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்லும் பலர் உரிய நேரத்தில் அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து காவல்துறை, போக்குவரத்து காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் பாதுகாப்பாக செல்ல உரிய தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

ஆனந்தன்Aug 16, 2022 - 09:34:48 PM | Posted IP 162.1*****

மக்களின் நெடுநாள் கோரிக்கையான ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் மீளவிட்டானுக்கு மாற்றினால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்

TN 69Aug 16, 2022 - 07:23:46 PM | Posted IP 162.1*****

3ம் கேட்டில் பாலம் உள்ளதை போல் 4ம் கேட்டிலும் 1ம் கேட்டிலும், 2ம் கேட்டிலும் பாலம் அமைக்க தீர்வு காண வேண்டும். மாநகரம் என்பது சாலைக் கட்டமைப்பை பொருத்தே வழங்கப்பட வேண்டுமே தவிர அழுத்ததின் பெயரில் பெறப்பட்டாலும் மாறாத நகரம் தூத்துக்குடி மாநகரம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory