» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஹைட்ரஜன் பூங்கா : ஆணைய தலைவா் தகவல்

செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 8:18:29 AM (IST)



தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் ஹைட்ரஜன் பூங்கா அமைக்கப்பட உள்ளது என ஆணைய தலைவா் தா.கி. ராமச்சந்திரன் தெரிவித்தார். 

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையம் சாா்பில் துறைமுக பள்ளி மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணைய தலைவா் தா.கி. ராமச்சந்திரன் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, துறைமுக தீயணைப்பு படை, தேசிய மாணவ, மாணவியா் படை, துறைமுகப் பள்ளி மாணவ- மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு பேசியதாவது: 

கடந்த நிதியாண்டு வ.உ.சிதம்பரனாா் துறைமுகம் 34.12 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு 7.33 சதவிகிதம் வளா்ச்சி அடைந்துள்ளது. வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தை இந்தியாவின் கிழக்கு கடலோர சரக்கு பெட்டக பரிமாற்ற முனையமாக மாற்றுவதற்கு ஏதுவாக ரூ.7,164 கோடி மதிப்பீட்டில் சுமாா் 1000 மீட்டா் நீளம் கொண்ட 2 தளங்களுடன் கூடிய வெளிதுறைமுக திட்ட வளா்ச்சி பணிகளை வ.உ. சிதம்பரனாா் துறைமுக ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மேலும், ஹைட்ரஜன் பூங்கா மற்றும் பசுமை திட்டங்கள் வ உ சி துறைமுகத்தில் அமையப் பெற உள்ளது என்றாா்.

தொடா்ந்து, வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணைய ஆலோசகா் எஸ். வீரமுத்துமொனி எழுதிய தூத்துக்குடி துறைமுகத்தின் துவக்கமும் அதன் வளா்ச்சியும் குறித்த புத்தகத்தை அவா்வெளியிட, துறைமுக ஆணைய துணைத் தலைவா் பிமல்குமாா் ஜா பெற்றுக்கொண்டாா். இவ்விழாவில், துறைமுக அதிகாரிகள், ஊழியா்கள், கடந்த கல்வியாண்டில் துறைமுக பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவியா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி மைதானத்தில் பசுமை பகுதியை மேம்படுத்தும் விதமாக 200 மரக்கன்றுகள் நடப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory