» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக்கில் இருந்து தவறிவிழுந்து இளம்பெண் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்

புதன் 10, ஆகஸ்ட் 2022 10:49:24 AM (IST)

தூத்துக்குடியில் கணவருடன் பைக்கில் சென்றபோது தவறி விழுந்து இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி சாமுவேல்புரத்தை சேர்ந்தவர் யோனஸ் இவரது மனைவி சகாய தன்யா (22) நேற்று கணவன் - மனைவி இருவரும் பைக்கில் மட்டகடையில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். குருஸ்புரம் ரோட்டில் உள்ள ஒரு மருத்துவமனை முன்பு செல்லும்போது சாலையில் இருந்த வேகத்தடையில் பைக் ஏறி இறங்கியதில் பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த சகாய தன்யா கீழே விழுந்தார்.

இதில் அவரது தலையில் பலத்த ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து

சாமான்யன்Aug 10, 2022 - 03:25:20 PM | Posted IP 162.1*****

தேவையற்ற வேகத்தடைகளை அகற்றி விடுங்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory