» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்: தூத்துக்குடியில் 6 கிராமங்கள் தேர்வு

செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 8:52:54 PM (IST)

தூத்துக்குடி வட்டாரத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்த 6 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகளை செயல்படுத்த தூத்துக்குடி வட்டாரத்தில் 6 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ள தெற்கு சிலுக்கன்பட்டி, மேல தட்டப்பாறை, கீழ தட்டாபாறை, தளவாய்புரம், வடக்கு சிலுக்கன்பட்டி, குமாரகிரி ஆகிய பஞ்சாயத்து பகுதியில் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் ஜெய செல்வின் இன்பராஜ் ஆய்வு மேற்கொண்டார். 

அவருடன் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சந்திரகலா, துணை வேளாண்மை அலுவலர் ஆனந்தன், உதவி வேளாண்மை அலுவலர் வடக்குவாச்செல்வி, தமிழ்ச்செல்வன், மணிகண்டன், மீனாட்சி, உதவி தோட்டக்கலை அலுவலர் கந்தையா, பிரியா, வெடியப்பன், உதவி தொழில்நுட்ப மேலாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் உடன் சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory