» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அம்பானி-அதானியின் 10.72 லட்சம் கோடி வங்கி கடனை வசூல் செய்யக் கோரி பிரச்சார இயக்கம்!

சனி 6, ஆகஸ்ட் 2022 8:21:25 PM (IST)அம்பானி-அதானியிடம் தள்ளுபடி செய்த 10.72 லட்சம் கோடி வங்கி கடனை முழுமையாக வசூல் செய்து வேலையின்றி தவிக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தர வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் நந்தினி வலியுறுத்தியுள்ளார். 

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :  ஒரு அரசாங்கம் மக்கள் நலனுக்காக செயல்படுகிறது என்றால் மிகப் பெரும் பணக்காரர்களிடம் முறையாக வரி வசூலித்து, ஏழை நடுத்தர மக்கள் முன்னேறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால் நம் நாட்டில் வரி மேல் வரி போட்டு ஏழை நடுத்தர மக்களை கொள்ளையடித்து அம்பானி-அதானி போன்ற பணமுதலைகளுக்கு மேலும் மேலும் சலுகைகள் கொடுத்து ஒரு சிறு கூட்டத்திடம் நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் குவிக்கும் வேலையை அரசாங்கமே செய்கிறது. 

இப்படியே போனால் இந்திய நாடே சில பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சொந்தமாக மாறிவிடும். நாட்டு மக்கள் அனைவரும் இந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமைகளாக மாறக்கூடிய நிலைமை உருவாகும். மத்திய மோடி அரசு நாட்டை ஒரு சில தனியார் முதலாளிகளுக்கு விற்கிறது என்றால் மாநில அரசோ டாஸ்மாக் மூலம் போதை விற்று தமிழ்நாட்டின் குடும்பங்களை நாசப்படுத்துகிறது. அதிமுக, திமுக என மாறி மாறி யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களை போதையில் சிக்கவைத்து சீரழிப்பதில் ஒரே கொள்கையை தான் கடைப்பிடிக்கின்றன.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா என்ற ஒரு மோசடி நாடகத்தை மத்திய, மாநில அரசுகள் நடத்தி பல லட்சம் மக்களை படுகொலை செய்து விட்டார்கள். கோடிக்கணக்கான மக்களின் வேலை வாய்ப்புகளையும், வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்தி விட்டார்கள். மக்கள் தொகையை குறைப்பதற்காகவும், சிறு தொழில்களை அழித்து ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்ப்பதற்காகவும் கொரோனா மோசடி நாடகம் குறு தொடர்ந்து நடத்தப்படுகிறது. பிரதமர் மோடியே இந்த கொரோனா மோசடி நாடகத்தின் முக்கிய குற்றவாளி ஆவார்.

சாமானிய மக்கள் வாங்கும் கடனுக்கு வட்டி மேல் வட்டி வசூலிக்கும் வங்கிகள், பெரிய தொழில் நிறுவனங்கள் வாங்கிய பல லட்சம் கோடி கடனை வாராக்கடன் என்ற பெயரில் தள்ளுபடி செய்கின்றன. மோடியின் 8 ஆண்டு ஆட்சியில் 10.72 லட்சம் கோடி வங்கி வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மோடிக்கு நெருக்கமான குஜராத் கார்ப்பரேட் நிறுவனங்கள் தம் நாட்டின் வங்கிகளை வரைமுறையின்றி வாராக்கடன் தள்ளுபடியில் பல லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழல் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக 10.72 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடியால் ஆதாயம் அடைந்தவர்களின் பெயர்களை வெளியிட மறுக்கின்றனர்.

விவசாய கடன், மாணவர்களின் கல்விக் கடன், சிறு தொழில் கடன் ஆகியவற்றை கறாராக வசூலிக்கும் வங்கிகள் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் லட்சக்கணக்கான கோடி கடனை வாராக்கடனாக தள்ளுபடி செய்வது மிகப் பெரிய ஊழலாகும். வட்டி, அபராத வட்டி, சேவை கட்டணம், குறைந்தபட்ச இருப்புத் தொகை Minimam Balance) இல்லை என்பதற்கான அபராதம், ATM பயன்பாட்டுக் கட்டணம் என பல விதங்களில் கோடிக்கணக்கான மக்களிடம் இருந்து வசூலிக்கும் வங்கிகள் அப்பணத்தை வாராக்கடன் தள்ளுபடி என்ற பெயரில் மோடிக்கு வேண்டிய பணமுதலைகளுக்கு தாரை வார்க்கின்றன.

இவ்வாறு அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்துவிட்டு சாமானிய மக்கள் மீது வரி மேல் வரி போட்டு பெட்ரோல், டீசல், கேஸ் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் உயர்த்தி மக்களை கொள்ளையடிக்கின்றனர். மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதாக வாக்குறுதி அளித்தார். மோடி பிரதமராகி 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. தான் வாக்குறுதி அளித்தபடி மோடி ஆட்சியில் வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் மாறாக ஏராளமான சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

மாணவர்கள் என்ன படித்தாலும் வேலை கிடைப்பதில்லை. மோடியின் 8 ஆண்டு ஆட்சியில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள 10.72 லட்சம் கோடி கடனை முறையாக வரும் செய்ய வேண்டும். அப்பணத்தைக் கொண்டு ஏராளமான புதிய தொழில்கள் தொடங்கி இளைஞர்களுக்கு பிரச்சார இயக்கத்துக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். இதனை வலியுறுத்தி நடைபெறும் மக்கள் ஆதரவு தர வேண்டுகிறோம் என்றார்.


மக்கள் கருத்து

kumarAug 8, 2022 - 01:19:42 PM | Posted IP 162.1*****

ippalam Tasmac mooda solli porataam pannalaya?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital
Thoothukudi Business Directory