» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இளம்பெண்ணை செல்போனில் வீடியோ எடுத்தவர் கைது
சனி 6, ஆகஸ்ட் 2022 5:46:05 PM (IST)
விளாத்திகுளம் அருகே இளம்பெண்ணை செல்போனில் படம் எடுத்ததை கண்டித்ததால் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்..
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் நாகலாபுரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காடல்குடி, மாவிலோடை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி அந்த பெண் தனது தங்கையுடன் ரேஷன் கடையில் இருந்தபோது, அங்கு ரேஷன் பொருட்கள் வாங்க வந்த மாவிலோடையை சேர்ந்த குமரையா மகன் பிரதீப் மேனன் (48) என்பவர் இளம்பெண்ணின் தங்கை பொருட்களை எடை போட்டுக் கொண்டிருக்கும்போது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இதைப் பார்த்த அந்த இளம்பெண் சத்தம் போட்டு உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரதீப் மேனன் அவரிடம் தகராறு செய்து அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து இளம்பெண் நேற்று அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் காடல்குடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் நாகராஜன் வழக்குபதிவு செய்து மேற்படி பிரதிப் மேனனை கைது செய்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம்: விஷம் குடித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி சாவு!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 8:45:17 PM (IST)

பாஞ்சாலங்குறிச்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 8:14:37 PM (IST)

குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் முத்துரம் உரம் : தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அறிமுகம்!!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 7:57:06 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் 17 போலீசார் மீது நடவடிக்கை : அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 7:41:03 PM (IST)

கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 5:45:27 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி : வாலிபர் கைது!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 5:15:09 PM (IST)
