» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டீக்கடையில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது!

சனி 6, ஆகஸ்ட் 2022 3:31:10 PM (IST)

தூத்துக்குடியில் டீக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி ஊரக காவல் உதவி கண்காணிப்பாளர் சந்திஸ் மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தலைமையில் உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தூத்துக்குடி 3வது மைல் திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் அருண்குமார் (23) என்பவரது டீக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

உடனே போலீசார் அருண்குமாரை கைது செய்து அவரிடமிருந்த ரூ.3ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 695 கிராம் புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory