» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்
சனி 6, ஆகஸ்ட் 2022 3:21:34 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த உப கோவிலான வெயிலுகந்தம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக அதிகாலை 4.30மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு யாகபூஜை, கும்பபூஜை, தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் குட்டி ராஜன் வல்லவராயர் அதிகாலை 5.20 மணிக்கு கொடியேற்றிவைத்தார். பின்னர் கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. பின்பு கொடி மரம் தர்ப்பை புல், மலர்கள், பரிவட்டங்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. திருவிழா இன்று தொடங்கி வருகிற 15-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகின்றது.
திருவிழா நடைபெறும் 10 நாட்களிலும் காலை மற்றும் இரவில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடக்கும். இரவு கோவிலில் பக்திச் சொற்பொழிவு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். கொடியேற்றம் நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் கார்த்திக், கோவில் தக்கார் பிரதிநிதி டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், திருப்பணி கட்டளைதாரர் அய்யப்பன் அய்யர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம்: விஷம் குடித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி சாவு!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 8:45:17 PM (IST)

பாஞ்சாலங்குறிச்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 8:14:37 PM (IST)

குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் முத்துரம் உரம் : தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அறிமுகம்!!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 7:57:06 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் 17 போலீசார் மீது நடவடிக்கை : அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 7:41:03 PM (IST)

கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 5:45:27 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி : வாலிபர் கைது!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 5:15:09 PM (IST)
