» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை வழக்கில் தொடர்புடையவர் தற்கொலை

சனி 6, ஆகஸ்ட் 2022 11:54:37 AM (IST)

மதுரை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நபர் தூத்துக்குடியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: மதுரை ஜெய்ஹிந்த் புரம், பாரதியார் தெருவை சேர்ந்தவர் பாண்டி மகன் முத்துகாமு (55), இவர் அந்தப் பகுதியில்  நடந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

இதனிடையே முத்துகாமு மனைவியுடன் தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரம் புளியநகர் அம்மன் கோவில் தெருவில் குடியிருந்து வந்தார். இந்நிலையில் கொலை வழக்கில் தனக்கு எதிராக தீர்ப்பு வந்துவிடுமா என்ற அச்சத்தில் இருந்த முத்து காமு நேற்று தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சாயர்புரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory