» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கத்தியால் தாக்கி கொலை மிரட்டல்: 2 பேர் கைது!
சனி 6, ஆகஸ்ட் 2022 11:46:01 AM (IST)
தூத்துக்குடியில் மதுபோதையில் தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி வடக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த செல்லப்பா மகன் ராசையா (எ) கலாம் (20), பத்திரகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கற்குவேல் மகன் அருண்குமார் (20) ஆகிய 2 பேரும் கடந்த 4ஆம் தேதி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் மதுபோதையில் ரகளை செய்துள்ளனர். இதனை அதே பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து மகன் மணி (25) என்பவர் 2 பேரையும் சத்தம் போட்டு உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் மணியிடம் தகராறு செய்து அவரை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து மணி நேற்று அளித்த புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமலிங்கம் வழக்குபதிவு செய்து ராசையா (எ) கலாம் மற்றும் அருண்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். கைது செய்யப்பட்ட ராசையா (எ) கலாம் மீது ஏற்கனவே வடபாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், அருண்குமார் மீது வடபாகம் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் உள்ளது குறிப்பிடதக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
புதன் 10, ஆகஸ்ட் 2022 8:28:51 AM (IST)

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது
புதன் 10, ஆகஸ்ட் 2022 8:00:52 AM (IST)

ரஜினிகாந்த் 30 ஆண்டாக அரசியலுக்கு வருகிறேன் என கூறிவருகிறார்: கடம்பூர் ராஜு கிண்டல் !
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 11:24:11 PM (IST)

பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் 301 திருவிளக்கு பூஜை!
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 9:32:11 PM (IST)

இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்: 320பேர் கைது
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 9:20:30 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 8:56:25 PM (IST)
