» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தம்பதியரை அரிவாளால் வெட்டி 2½ பவுன் நகைபறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

சனி 6, ஆகஸ்ட் 2022 11:14:12 AM (IST)

கோவில்பட்டியில் கணவன்-மனைவியை அரிவாளால் வெட்டி 2½ பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வ.உ.சி., நகரைச் சேர்ந்தவர் சொரிமுத்து மகன் பரமசிவன் (67). பூக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பார்வதி (60) நேற்று இரவு 8 மணியளவில் கணவன்-மனைவி இருவரும் அப்பகுதியில் சாலையில் நடந்து வந்தபோது ஒரே பைக்கில் வந்த 2 மர்ம ஆசாமிகள், தம்பதியரை அரிவாளால் தாக்கியுள்ளனர். பின்னர் பார்வதியின் கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றுவிட்டனர். 

இதுகுறித்து புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) சுதாதேவி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் வெட்டியதில் படுகாயம் அடைந்த கணவன்-மனைவி இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital
Thoothukudi Business Directory