» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் புரோட்டா மாஸ்டர் வெட்டிக் கொலை : மேலும் 3பேருக்கு வெட்டு - மர்ம கும்பல் வெறிச்செயல்!

சனி 6, ஆகஸ்ட் 2022 10:44:15 AM (IST)

தூத்துக்குடியில் ஓசியில் பார்சல் தராததால் ஏற்பட்ட தகராறில், புரோட்டா மாஸ்டரை மர்ம கும்பல் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி, ராஜகோபால் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தப்பன் மகன் கருப்பசாமி, இவர் தூத்துக்குடி 3வது மைல் அரசு மருத்துவக் கல்லூரி அருகே காமராஜ் நகரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். நேற்று இரவு 10 மணியளவில் மதுபோதையில் ஹோட்டலுக்கு வந்த 3பேர் ஓசியில் பார்சல் கேட்டு தகராறு செய்து கடை உரிமையாளரை தாக்கியுள்ளனர். இதையடுத்து கடையின் புரோட்டா மாஸ்டராக வேலைபார்த்து வரும் முடிவைத்தானேந்தல், ஓதுவார் தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் பொன் செந்தில் முருகன் (31) உட்பட ஹோட்டல் ஊழியர்கள் அவர்களை தட்டிக் கேட்டுள்ளனர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது. 

இந்நிலையில் கடையில் வியாபாரம் முடிந்து கடை ஊழியர்களான பொன்செந்தில் முருகன், மற்றும் திரவிய ரத்தினம் நகரைச் சேர்ந்த பர்னபாஸ் மகன் தேவராஜ் (39), சாயர்புரம் ரைஸ்மில் தெரு முருகேசன் மகன் சாமுவேல் (37), அப்பகுதியில் பால்பூத் நடத்தி வரும் பிரையன்ட் நகர் 13வது தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் பழனி முருகன் (55) ஆகியோர் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். ஆசிரியர் காலனி அருகே சென்றபோது 5பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து அரிவாளால் சராமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பொன் செந்தில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தேவராஜ், பழனிமுருகன், சாமுவேல் ஆகிய மூவரும் பலத்த காயம் அடைந்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்து தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொன்செந்தில் முருகன் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை்ககு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த மூவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தை எஸ்பி பாலாஜி சரவணன், டிஎஸ்பி சத்தியராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த கொலை தொடர்பாக தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராாஜாராம் வழக்குப்பதிந்து, 3வது மைல் புதுக்குடியைச் சேர்ந்த தவசி பெருமாள் மகன் கற்குவேல் (22) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் 4பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

தமிழன்Aug 6, 2022 - 06:07:07 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் என்கவுண்டர் அவசியம்.முதல்வர் அவர்கள் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவேண்டும்.திரு.ஷைலேந்திர பாபு அவர்களிடம் காவல்துறையின் முக்கிய பொறுப்புகளை கொடுக்கவேண்டும்.

மக்கள்Aug 6, 2022 - 01:42:42 PM | Posted IP 162.1*****

என்கவுண்டர் தான் சரியான தீர்வு

முத்துநகர் முத்துAug 6, 2022 - 01:19:20 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி மாநகர் முழுவதும் கஞ்சா வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது காவல்துறையும் எவ்வளவு நடவடிக்கை எடுத்தும் கட்டுப்படுத்த முடியவில்லை கள்ளன் பெருசா காப்பான் பெருசா என்ற நிலையில் கஞ்சா வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது இதனால் விளையும் விளைவுகள் தான் இது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital
Thoothukudi Business Directory