» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டம்: தூத்துக்குடியில் பரபரப்பு!!

வெள்ளி 5, ஆகஸ்ட் 2022 4:49:24 PM (IST)மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்தாத, அமலாக்க துறை மூலம் எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். இதையொட்டி தூத்துக்குடியில் கலைஞர் அரங்கம் அருகே முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐஎன்டியூசி மாநில அமைப்புச் செயலாளர் பெருமாள்சாமி ஏற்பாட்டின் பேரில் முன்னாள் மாவட்ட  தலைவர் முத்துக்குட்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது.

இதில் அமைப்புசாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி,  தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ் வெள்ளப்பட்டி ஜேசுதாசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா, மாவட்ட காங்கிரஸ் பொது செயலாளர் இக்னேஷியஸ், மணல்மேடு மீனவரணி மிக்கேல் குரூஸ்,  ஜெயமணி, பேரையா, ஜான் வெஸ்லி, பெத்துராஜ், எட்வர்ட் ராஜ், மடத்தூர் தனபால்ராஜ், முள்ளக்காடு மாரியப்பன், சுந்தர்ராஜ், சிவலிங்கம், முத்து, ரமேஷ், சாரதி, பிரபு, கௌதம், கார்த்தி, பாலன், ஜெயசிங், கோபி, செல்வராஜ், மகிளா காங்கிரஸ் செல்லதாய், சாவித்திரி, சற்குணம், ஆறுமுக கனி, ஜோதி, கிருஷ்ணம்மாள், சுந்தரி, மாரியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை வடபாகம் போலீசார் கைது செய்தனர். 


மக்கள் கருத்து

PavanasammuthuAug 5, 2022 - 10:35:38 PM | Posted IP 162.1*****

அடிப்படை உறுப்பினராக இருந்து கொண்டு இவ்வளவு சிறப்பாக செயல்பட்டு வரும் அண்ணன் திரு கே பெருமாள் சாமி அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital
Thoothukudi Business Directory