» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்லூரியில் பேராசிரியருக்கு அடி-உதை: மாணவர்கள் 2பேர் சஸ்பெண்ட்!

வெள்ளி 5, ஆகஸ்ட் 2022 10:32:02 AM (IST)

கோவில்பட்டியில் அரசு கலை - அறிவியல் கல்லூரியில், கணிதத்துறை தலைவரான பேராசிரியரை மாணவர்கள் தாக்கியதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத்துறை பிரிவு தலைவராக பேராசிரியர் சிவசங்கரன் செயல்பட்டு வருகிறார். அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவரும் ஒரு மாணவியும் பேசி வருவதை பேராசிரியர் சிவசங்கரன் கண்டித்ததாகவும் மேலும் இதுகுறித்து அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலையில் பேராசிரியர் சிவசங்கரன் தனது துறை பிரிவு அலுவலகத்தில் இருந்தபோது 4 மாணவர்கள் தன்னை தாக்கியதாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய போலீசார் 4 மாணவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையேபேராசிரியர் சிவசங்கரன் கோவில்பட்டி அரசு அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் 2 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் தற்காலிக இடைநீக்கம் செய்துள்ளது. இதேபோல் பேராசிரியர் சிவசங்கரன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கல்லூரியில் பேராசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital


Thoothukudi Business Directory