» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை : 2பேர் கைது
வெள்ளி 5, ஆகஸ்ட் 2022 10:22:39 AM (IST)

ஏரல் அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். 132 மதுபாட்டில்கள், மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. .
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் மேற்பார்வையில் ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதா தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட தனிப்படை போலீசார் நேற்று வாழவல்லான் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, புதுக்கோட்டை கூட்டாம்புளி பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் முருகேசன் (39) மற்றும் ஏரல் அம்மாள் தோப்பு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் குணபால் (37) ஆகிய இருவரும் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 132 மதுபாட்டில்கள், ரொக்க பணம் ரூ.5,180 மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஏரல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
பொதுமக்கள்Aug 5, 2022 - 04:33:50 PM | Posted IP 162.1*****
திடீர் பணக்கார ஆசை- நீதியை நிலைநிறுத்தி தண்டனை கொடுக்கவும்.
மேலும் தொடரும் செய்திகள்

காதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம்: விஷம் குடித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி சாவு!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 8:45:17 PM (IST)

பாஞ்சாலங்குறிச்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 8:14:37 PM (IST)

குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் முத்துரம் உரம் : தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அறிமுகம்!!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 7:57:06 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் 17 போலீசார் மீது நடவடிக்கை : அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 7:41:03 PM (IST)

கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 5:45:27 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி : வாலிபர் கைது!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 5:15:09 PM (IST)

தமிழன்Aug 5, 2022 - 06:41:33 PM | Posted IP 162.1*****