» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூய்மை பணியாளர்களுக்கு காசநோய் கண்டறியும் முகாம்

வியாழன் 4, ஆகஸ்ட் 2022 4:53:16 PM (IST)கோவில்பட்டியில் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. 

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக கோவில்பட்டி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி  தலைமை வகித்தார். மாவட்ட நலக்கல்வியாளர் தங்கவேல் வரவேற்று பேசினார். துணை இயக்குநர் சுகாதார பணிகள் (காசம்) சுந்தர லிங்கம் சிறப்புரை ஆற்றினார். நகராட்சி ஆணையர் ராஜாராம் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் சரவணன் நன்றி கூறினார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காசநோய் மையம்  தீர்வு முறை அமைப்பாளர் குப்புசாமி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தான சங்கர்வேல், அரசு மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் மோகன், சுகாதார ஆய்வாளர்கள் கணேசன், காஜா நதிமுதின், சரவணன் முதுநிலை ஆய்வுகூட மேற்பார்வையாளர் தனசெல்வி சோபியா, முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சரவணன், சுகாதார பார்வையாளர் மகேஷ், ஆய்வுகூட நுட்புனர் ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்தார்


மக்கள் கருத்து

kkkkkAug 4, 2022 - 05:10:00 PM | Posted IP 162.1*****

apo seivinaiya olichaa kaasa noi poiduma?

adaminAug 4, 2022 - 05:07:45 PM | Posted IP 162.1*****

seivinai vaithaal kaasa noi varum nu ethana perukku theriyum?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital
Thoothukudi Business Directory