» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சென்ட்ரிங் சீட்டுளை திருடியவர் கைது: சரக்கு வாகனம் பறிமுதல்!

வியாழன் 4, ஆகஸ்ட் 2022 3:33:56 PM (IST)



தூத்துக்குடி அருகே கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் சென்ட்ரிங் சீட்டுளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பண்டாரவிளை பகுதியைச் சேர்ந்த யோசேப் மகன் இன்பராஜ் (46) என்பவருக்கு சொந்தமான நட்டாத்தி - பண்டாரவிளை ரோடு பகுதியில் உள்ள குடோனிலிருந்து கடந்த 31.05.2022 அன்று கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் 400 சென்ட்ரிங் சீட்டுகள் காணாமல் போயுள்ளது. இதுகுறித்து இன்பராஜ் நேற்று அளித்த புகாரின் பேரில் சாயர்புரம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், தூத்துக்குடி மடத்தூர் துரைக்கனி நகர் பகுதியை சேர்ந்த வாழவெட்டி முத்து மகன் நவீன் சிவா (22) என்பவர் இன்பராஜின் குடோனில் இருந்து 400 சென்ட்ரிங் சீட்டுகளை  சரக்கு வாகனத்தில் திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து நவீன் சிவாவை, சாயர்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முனியசாமி கைது செய்து அவரிடமிருந்த திருடுவதற்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தார். இதுகுறித்து சாயர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory