» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து நினைவு மண்டபம் பணிகளை உடனே துவங்க கோரிக்கை!
வியாழன் 4, ஆகஸ்ட் 2022 12:07:43 PM (IST)

தூத்துக்குடி நகரின் தந்தை என போற்றப்படும் குரூஸ் பர்னாந்து நினைவு மணிமண்டபம் கட்டும் பணியை உடனே துவங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் செல்வ பெருந்தகையிடம் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து மக்கள் பேரவை நிர்வாகிகள் அளித்த மனு : முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினர், முன்னாள் நகர்மன்ற தலைவர், தூத்துக்குடி நகருக்கு குடிநீர் கொண்டு வந்த கோமான் குரூஸ் பர்னாந்தீஸ் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.
மேலும் தற்போதைய அரசு தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து நினைவு மணிமண்டபம் அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. வரும் நவம்பர் 15ம் தேதி குரூஸ் பர்னாந்து அவர்களின் 152வது பிறந்த நாள் கொண்டாட இருக்கும் சூழ்நிலையில் மணிமண்டம் கட்டும் பணிகளை உடனே துவங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம்: விஷம் குடித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி சாவு!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 8:45:17 PM (IST)

பாஞ்சாலங்குறிச்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 8:14:37 PM (IST)

குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் முத்துரம் உரம் : தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அறிமுகம்!!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 7:57:06 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் 17 போலீசார் மீது நடவடிக்கை : அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 7:41:03 PM (IST)

கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 5:45:27 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி : வாலிபர் கைது!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 5:15:09 PM (IST)

Lenin fdoAug 4, 2022 - 01:16:32 PM | Posted IP 162.1*****