» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மழைநீர் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

வியாழன் 4, ஆகஸ்ட் 2022 8:20:10 AM (IST)தூத்துக்குடியில் மழைநீர் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பருவமழையை கருத்தில் கொண்டு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புகள், முக்கிய சாலைகள், சாலை சந்திப்புகள் போன்ற இடங்களில் மழைநீர் தேங்காத வகையில் புதியதாக மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. அதன்படி 17-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளான முத்துகிருஷ்ணா நகர், பால்பாண்டி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணியை மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தையும் மழைக்காலத்துக்கு முன்பு முடிக்க வேண்டும் என்று ஒப்பந்தக்காரர்களை அறிவுறுத்தினார். வடிகால்கள் தரமாகவும், சரியான அளவிலும் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தொடர்ந்து அவர் கூறும் போது, இந்த ஆண்டு முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் பணிகளை கருத்தில் கொண்டும், இந்த மழைநீர் வடிகால்கள் மழைக்காலங்களில் எப்படி செயல்படுகிறது என்பதை முழுமையாக கண்டறிந்தும் அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த பணிகள் மேம்படுத்தப்படும் என்று கூறினார். ஆய்வின் போது, மாநகராட்சி அலுவலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து

ஒன்னும் இல்லைAug 4, 2022 - 10:35:06 AM | Posted IP 162.1*****

மழைநீர் வடிகால் சொல்லி சாக்கடை ஆகி விடுவாங்க மாநகராட்சி, தண்ணீர் தேங்காமல் பல ஆண்டுகள் அப்படியே கருப்பாக இருக்கும்.சில வடிகாலில் மண் தேங்கி இருக்கும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham HospitalThoothukudi Business Directory