» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாப்பிள்ளையூரணியில் ரூ.19.5 லட்சம் மதிப்பில் புதிய நீர்தேக்க தொட்டி: பூமி பூஜையுடன் பணிகள் தொடக்கம்

புதன் 3, ஆகஸ்ட் 2022 12:43:50 PM (IST)தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் ரூ.19.5 லட்சம் மதிப்பில் புதிய நீர்தேக்க தொட்டி கட்டும் பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கியது.

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி ராஜபாளையம் பகுதியில் புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு ரூ. 19 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி இன்று பூமி பூஜையுடன் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் தலைமை வகித்து பணிகளை தொடங்கி வைத்தார். 

முன்னதாக தாளமுத்துநகர் பங்குதந்தை நெல்சன் ராஜ் ஜெபம் செய்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, பெலிக்ஸ், ஊர் பிரமுகர்கள் விக்டர், விமல், தொம்மை அந்தோணி, ஆசைத்தம்பி, பிரபு, வினோத், நிக்சன், மற்றும் மரியம்ஸ், கௌதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

thoothukudi karan அவர்களுக்குAug 5, 2022 - 06:44:57 PM | Posted IP 162.1*****

எந்த மதமாக இருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்வது தப்பில்லை.

thoothukudi karanAug 3, 2022 - 04:06:27 PM | Posted IP 162.1*****

Arasu nigalchiyil christava muraipadi jebama?? Darmapuri MP than ithai ketka vendum.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital
Thoothukudi Business Directory