» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சர்வேகல், தடுப்பு வேலி சேதம்: தாய், மகன் மீது வழக்கு

சனி 2, ஜூலை 2022 8:36:07 PM (IST)

சாத்தான்குளம் அருகே காலிமனை இடத்தில் சர்வேகல் மற்றும் தடுப்பு வேலியை சேதப்படுத்தியதாக தாய், மகன் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள ஆலங்கிணறு வேலாயுதபுரத்தை சேர்ந்தவர் சேவியர்ராஜ் மனைவி ஜெயக்கனி (65). அதேபகுதி ஒத்தவீடு சென்னிவீரன்தட்டு பகுதியைசேர்ந்த பெருமாள் மனைவி மாடத்தி(50). இவர்களுக்கு சொந்தமான காலிமனை, சாத்தான்குளம் அருகேயுள்ள தஞ்சைநகரம் பெந்தேகொஸ்தசபை பகுதியில் உள்ளது. இதனிடையே காலிமனை இடத்தில் சர்வேகல் மற்றும் தடுப்புவேலி அமைப்பது தொடர்பாக இவர்களிடையே பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. 

இந்நிலையில் பிரச்னைக்குரிய இடத்தில் சர்வேகல் மற்றும் தடுப்புவேலி சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இருதரப்பினரும் தனித்தனியாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஜெயக்கனி அளித்த புகாரின் பேரில் மாடத்தி மற்றும் அவரது மகன் மாடசாமி ஆகியோர் மீது சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ஜாண்சன் வழக்குப்பதிவு செய்தார். இதுபோல் மாடத்தி அளித்த புகாரின் பேரில் ஜெயக்கனியின் மகன் டேவிட்சன்பாக்கியராஜ் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham HospitalThoothukudi Business Directory