» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரயில்வே பாதுகாப்பு சாதனை விளக்க விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி.
சனி 2, ஜூலை 2022 8:26:52 PM (IST)

75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு மதுரை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை விழிப்புணர்வு வாகன பேரணிக்கு கோவில்பட்டியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பரதநாட்டின் 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு மதுரை கோட்ட ரயில்வே படையைச் சேர்ந்த 12-க்கும் மேற்பட்ட வீரர்கள் மதுரை கோட்ட சார்பு ஆய்வாளர் ஜார்ஜ் முல்லர் தலைமையில் இந்திய ரயில்வேயின் சாதனைகளை விளக்கி குறும்படம் காண்பிக்கப்பட்டு மதுரையில் இருந்து துவங்கி விருதுநகர்,கோவில்பட்டி,திருநெல்வேலி,செங்கோட்டை,தூத்துக்குடி வழியாக சென்னை சென்று அங்கிருந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி டெல்லி செல்கிறது.
கோவில்பட்டிக்கு வருகை தந்த வாகன பேரணி வரவேற்பு நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரயில் நிலைய சார்பு ஆய்வாளர் சந்திரன் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க செயலாளர் மணிகண்ட மூர்த்தி,பொருளாளர் காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி ரயில் நிலைய பாதுகாப்பு படை காவலர் பார்த்தசாரதி அனைவரையும் வரவேற்றார். கோவில்பட்டிக்கு வருகை தந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கு சால்வை அனுவிக்கப்பட்டு பிரட் , குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன், காஞ்சிபுரம் மாவட்ட நூலக ஆய்வாளர் (பணி நிறைவு)பூல்பாண்டி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் சீனிவாசன், முத்துச் செல்வன், மாரியப்பன், முத்து முருகன், கருப்பசாமி, இளங்கோ, தாமோதர கண்ணன்.நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரயில்வே பாதுகாப்பு படை உதவி சார்பு ஆய்வாளர் கணேசன் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம்: விஷம் குடித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி சாவு!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 8:45:17 PM (IST)

பாஞ்சாலங்குறிச்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 8:14:37 PM (IST)

குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் முத்துரம் உரம் : தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அறிமுகம்!!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 7:57:06 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் 17 போலீசார் மீது நடவடிக்கை : அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 7:41:03 PM (IST)

கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 5:45:27 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி : வாலிபர் கைது!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 5:15:09 PM (IST)
