» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குமரி மாவட்டத்தில் தொடரும் சூறைக்காற்று: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

சனி 2, ஜூலை 2022 5:38:04 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து வீசும் சூறைக்காற்றால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாட்களாக காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. அதிகாலையில் சூறாவளியாக காற்று வீசுகிறது. கடலில் மிக உயரமாக அலை எழும்புகிறது. இதனால் விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து துவங்குவதில் தினமும் தாமதம் ஏற்படுவதுடன் அடிக்கடி நிறுத்தியும் வைக்கப்படுகிறது.

சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலையில் புறப்பட்டு சென்ற 350 படகுகள் சிறிது நேரத்திலேயே கரை திரும்பின. நேற்றும் படகுகள் செல்லவில்லை. சிறிய நாட்டு படகுகள் மற்றும் வள்ளம் கரையில் பாதுகாப்பாக கட்டி போடப்பட்டுள்ளன. காற்றின் வேகம் தொடர்ந்து அதிகமாக உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சில நாட்களாக மீன்வரத்து இல்லாததால் சந்தைகள் வெறிசோடின. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory