» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி காவல் துறையினருக்கு டிஜிபி பாராட்டு!

சனி 2, ஜூலை 2022 5:05:45 PM (IST)சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

தூத்துக்குடியில் சிப்காட் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 24.3.2022 ஆம் ஆண்டு நடந்த பெண்ணை கொலை செய்து நகைகளை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் யார் என்று தெரியாமல் இருந்த நிலையில், இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்டு  குற்றவாளிகள் 2பேரை கைது செய்து சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி ரூரல் தனிப்படை உதவி ஆய்வாளர் நம்பிராஜன், சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர், தனிப்பிரிவு காவலர் கலைவாணன் ஆகியோர்களுக்கு  நெல்லையில் நடந்த நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார், தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital


Thoothukudi Business Directory